மேஷராசி: ( அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் )

4ம் இடம் மத்திமபலன். 

பெரிய குறிக்கோள்களுடன் வாழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், சூழலுக்கு ஏற்ப செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம்-பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு. வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்கவும்.  தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகுத்தண்டு வலி வந்து போகும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலருக்கு புது வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பாக்ய- விரயாதிபதியான குரு, தனது சாரமான புனர்பூசத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.  தந்தையும், அவர் வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். வேலை கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக் குறை, இனந் தெரியாத கவலைகள் வந்து செல்லும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் மோதல்கள் விலகும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெற பாருங்கள்.தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றவேண்டிய நிர்பந்தம்  உணவு, துணி வகைகளால் லாபம்

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். எனினும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். எதிலும் பெற்றோரின் முடிவுகளை ஏற்பது நல்லது. சிலருக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு ஏமாற்றங் களைத் தந்தாலும் கடின உழைப்பால் உங்களை முன்னேற வைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில்  ஈஸ்வரனையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்.

 

இடபராசி: ( கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ம் பாதம் )

3ம் இடம் சுபபலன். 

அனைத்தையும் அறிந்தவர் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். சேமிப்பை கரைக்காதீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பண வரவு உண்டு. சிலருக்கு வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால், மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். புது வாகனம் வாங்குவீர்கள்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் அஷ்டம- லாபாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால் வேலைச் சுமை, திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். புது பதவிகளை யோசித்து ஏற்கவும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பாக்யாதிபதியும்- ஜீவனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் தன – பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பு குழந்தை பாக்கியம் உண்டாகும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு கேதுவின் மக நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். தம்பதிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், குழப்பம், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து, அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிக அலைக்கழிப்புகள் இருக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சில தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் உங்களின் நிலையை தக்கவைக்க போராட வேண்டியது இருக்கும்.

கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவார்கள். மாணவ- மாணவியர் விரும்பிய கல்விப்பிரிவில் சேருவார்கள்.

கலைத் துறையினரின் யதார்த்தப் படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். முன்னேற்றம் உண்டு.

  

மிதுனராசி: ( மிருகசீரிடம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ம்,2ம், 3ம் பாதம் )

2ம் இடம்சுபபலன். 

மன்னிக்கும் குணம் கொண்ட பண்பாளர் நீங்கள். குருபகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்படும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகள் வாய்க்கும். நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால், வேலைச் சுமை, வீண் அலைச்சல், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, உத்தியோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வந்து போகும். வருமான வரி, சொத்து வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் அஷ்டம- பாக்கியாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பணவரவு உண்டு.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிநாதனும் – சுகாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். எவருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக உதவ வேண்டாம்.

 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எனினும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்துசெல்லும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

 

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, புது வேலையில் அமருவீர்கள். மாணவ- மாணவியரின் அலட்சியப் போக்கு மாறும்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தொட்டதையெல்லாம் துலங்க வைத்து உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்.

 கடகராசி: ( புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம் )

1ம் இடம் சுபபலன்இல்லை ஜென்மத்து வியாழன்.  

சிறந்த பரோபகாரி நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை ஜென்ம குருவாக அமர்வதால், பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதாக நினைத்து வீண் பயம் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும்.

எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சஷ்டம- பாக்கி யாதிபதியான குரு, சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாணம் கூடி வரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சப்த-அஷ்டமாதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். கடன் பிரச்னையை நினைத்து பயம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-விரயஸ்தானாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள் வந்து நீங்கும். இளைய சகோதரர்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள்.

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு.

22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீண் செலவுகள் வேண்டாம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளும், சிறு சிறு நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். புது முதலீடுகளோ, எவருக்கும் முன்பணம் தருவதோ, கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதோ வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும்.

உத்தியோகத்தில் வேலை கூடும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக்கொண்டே

 

கன்னிப் பெண்களுக்கு பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்.

 

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் வேலைச் சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை உணரும் சக்தியையும் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் முருகனை வணங்கி வழிபட்டு வாருங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.

  

சிம்மராசி: ( மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம் )

12ம் இடம் சுபபலன் இல்லை – விரயஸ்தானம்

 மகிழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் எழும் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், வேறு ஊருக்கு குடிபெயரலாம். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்து சேரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சஷ்டம- சப்தமாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். புதியவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். மனைவியின் நலனில் கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை தனாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும்.

 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமண முயற்சிகள் பலிதமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள்

வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத் ததை முடிப்பீர்கள்.

 

கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவ-மாணவியருக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளை தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

 

பரிகாரம்: உத்திராட நட்சத்திரத் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.

 

கன்னிராசி: ( உத்தரம் 2, 3, 4ம் பாதங்கள், அத்தம், சித்திரை 1,2ம் பாதம் )

11ம்இடம் – சுப பலன்

கனவை நனவாக்கும் உழைப்பாளி நீங்கள்.  குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 11-ல் அமர்வதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார். பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனை அடைப்பீர்கள். வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

அரசு விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் மனஸ்தாபங்கள் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மனத்தில் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு, ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்:

13.6.14 முதல் 28.6.14 வரை, உங்களின் சுக- சப்தமாதிபதியான குரு பகவான் தனது சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும்.

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பூர்வ புண்யாதி பதியும்-சஷ்டமாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் ராசியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  புதிதாக சொத்து வாங்குவீர்கள். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை.

 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகரின் எல்லைப் பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில், பற்று- வரவு உயரும். சந்தை நிலவரத்தை  அறிந்து, அதற்கேற்ப குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம் ஆகியவை விலகும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள்.

 

கன்னிப்பெண்களுக்கு, புதிய நட்பால் உற்சாகம் உண்டு. கல்யாணம் கூடி வரும். புது உத்தியோகம் அமையும். மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் படிப்பார்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை பிரபலமாக்கு வதுடன், பண வரவையும் சொத்துச்சேர்க்கையையும் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வணங்கி வாருங்கள்.

 துலாராசி: ( சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதம் )

10ம் இடம் சுபபலன் இல்லை 

 பழைமையில் புதுமையை திணிப்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு

10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே… என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர்.

எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். நகை, பணத்தை இழக்க நேரிடும். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்டிருந்த காரியங்கள் இனி கைகூடும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சேவகாதிபதியும் – சஷ்டமாதிபதியுமான குருபகவான் புனர்பூசத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதை எண்ணி வருந்துவீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சுக-பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பண வரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். தந்தை மற்றும் அவர் வழி உறவுக ளால் ஆதாயமடைவீர்கள்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், சிக்கனம் தேவை. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச்சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிருங்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்றும் எண்ணம் எழும். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது.

 

கன்னிப்பெண்கள், எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவ – மாணவியருக்கு, விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர்வதற்கு சிலரது சிபாரிசை நாடவேண்டியது இருக்கும்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவு- சுளிவுகளை, சமூகத்தில் வளைந்து கொடுத்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.

 

விருச்சியராசி: ( விசாகம் 4ம் பாதம், அனுசம், கேட்டை )

9ம் இடம் – சுபபலன் 

வாய்மையே வெல்லும் என்பதை அனுபவத்தால் உணர்ந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைகிறார். புது வியூகங்களால் முன்னேறத் துவங்குவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தந்தை வழிச் சொத்துகள் வந்து சேரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு தீர்வு கிடைக்கும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். அவர்வழி உறவினரும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு வாங்கும் ஆசை நிறைவேறும்.

குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகமலர்ச்சியுடன் திகழ்வீர்கள். குரு உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு இனி குழந்தை தங்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் மற்றும் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு கூடும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சேவகாதிபதியும் சுகாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலை கூடும். எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி, எலும்பு தேய்மானம் வரக்கூடும். இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வீண் செலவுகள் வேண்டாம்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை அஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், இருமல், சளித் தொந்தரவு, காய்ச்சல், மறைமுக நெருக்கடிகள், வாகன விபத்துகள் வந்து செல்லும். அயல் நாட்டில் இருப்பவர்கள் உதவுவர். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 10-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச் சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.

 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், கனவுகள் நனவாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில், உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பதவி, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

 

கன்னிப்பெண்களுக்கு நல்ல உத்தியோகம் அமையும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து, திருமணம் சிறப்பாக முடியும்.   மாணவ- மாணவிகள், நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, முதல் வரிசையில் உங்களை உட்காரவைப்பதுடன், வசதி- வாய்ப்புகளையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

 

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுங்கள். வாரிசு இல்லாதவர்களுக்கு உதவுங்கள்.

வளம் பெருகும்.

 தனுராசி: ( மூலம்இ பூராடம்இ உத்தராடம் 1ம் பாதம் )

8ம் இடம் – சுபபலன் இல்லை – அட்டமத்து வியாழன் 

இயல்பு நிலையை எதற்காகவும் மாற்றிக் கொள்ளாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியமும், மனப்பக்குவமும் வாய்க்கும். உங்களின் சில பலவீனங்களையும், பிடிவாத போக்கையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கடன் பிரச்னை மனத்தை வாட்டும்.

சந்தேகத்தையும், ஈகோவையும் ஒதுக்கிவையுங்கள்.அதனால் நட்பும் குடும்பமும் நலம்பெறும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். செலவுகளும் வழக்கால் நெருக்கடிகளும் வேலைப்பளுவும் உண்டு.  சொத்து வரியை செலுத்தி சரியாகப் பராமரியுங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். நகை, பணம் களவு போக வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.

குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வ தால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. ஆபரணங்கள் வாங்குவீர்கள். விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் தனாதிபதியும்  சேவகாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். கடனைத் தந்து முடிப்பீர்கள். சிலர் வீடு மாறும் நிர்பந்தத்துக்கு ஆளாவார்கள். வேற்று மாநிலம், வெளி நாடுகளில் இருப்பவர்களுடன் இணைந்து புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் சப்தமாதிபதியும் ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போன்ற கவலைகள், நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதியவரை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 9-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். அரசாங்க விஷயம் உடனே முடியும்.

22.12.14 முதல் 17.4.15 வரை ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் குரு வக்ர கதியில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். தந்தையின் உடல் நிலை சீராகும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் மீண்டும் நிகழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம்.

உத்தியோகத்தில் கோபதாபங்கள் வேண்டாம். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள

 

கன்னிப்பெண்களே! சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் கவனமுடன் செயல்படுங்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைப்பது நல்லது. மாணவ- மாணவிகள், கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தைக் கைவிடுங்கள். விளையாட்டின்போது காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கவனம் தேவை.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும், திருவாசகம் பாடி வணங்குங்கள்.

 

மகரராசி: ( உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம்,

அவிட்டம் 1,2ம் பாதம் )

7ம் இடம் – சுபபலன்

 

பிறந்த மண்ணை மறவாதவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்வின் நெளிவுசுளிவு களைக் கற்றுக்கொள்வீர்கள். தம்பதிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தடைப்பட்டிருந்த அன்பர்களுக்குத் திருமணம் கூடிவரும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். அரசு விஷயங்கள் நல்லவிதமாக முடியும். மனைவி, உங்களின் புதிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும்.

குரு உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கடின காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கௌரவப் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடனான பிணக்குகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

 

குரு பகவானின் சஞ்சாரம்:

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், அவ்வப்போது உடலளவில் பலவீனமாக உணர்வீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் தனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். புது வேலை கிடைக்கும்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்யாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், பழைய கடன் பிரச்னை கட்டுப்படும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்தபந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்துசெல்லும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட ஆலோசகரை ஆலோசிப்பது நல்லது. எவரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில், சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும்.

உத்தியோகத்தில், உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரிகளுக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு தாமதமின்றிக் கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.

 

கன்னிப்பெண்களுக்கு, நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு, கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாகும். மாணவ-மாணவியரின் எண்ணங்கள் பூர்த்தியாகும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்று வதாக அமையும்.

பரிகாரம்: பெருமாளை துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.

 

கும்பராசி: ( அவிட்டம் 3ம், 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம், பாதம் )

6ம் இடம் சுபபலன் இல்லை – சத்துருஸ் தானம்

சிந்தனைவாதிகள் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரையிலும் ராசிக்கு 6-ல் மறைகிறார். ‚சகட குருவாச்சே… சங்கடங்களைத் தருவாரே…’ என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் அவர் செல்வதால், ஒரளவு நல்லதே நடக்கும். முயற்சியால் முன்னேறப் பாருங்கள். மற்றவர்களின் பலம் – பலவீனத்தை அறிவீர்கள் என்றாலும், சில தருணங்களில் ஏமாறவும் வாய்ப்பு உண்டு. செலவுகள் உண்டு. வீண் சந்தேகம், ஈகோப் பிரச்னையால் பிரிவுகள் வரக்கூடும். அரசு வரிகளைச் செலுத்துவதில் தாமதம் வேண்டாம்.

குரு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், பணவரவு, குடும்பத்தில் நிம்மதி உண்டு. சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், புது வேலை கிடைக்கும். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொன்றை விற்கவேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

 

குருபகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் தனாதிபதியும் லாபாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச் சுமையும் தொடரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூசத்தில் குரு செல்வதால், செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மகளின் பிடிவாதம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோக முயற்சிகள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்வதால், செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும்.

 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத் திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை நினைத்து பயம் எழும். கர்ப்பிணிகளுக்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீடு, மனை வாங்கு வது, விற்பது நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு.

வியாபாரத்தில், அதிரடி மாற்றங்களால் லாபம் ஈட்டுவீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக ஆதாயம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற பலன் இல்லையே எனும் ஆதங்கம் எழும்.

 

கன்னிப் பெண்களுக்கு, பெற்றோருடனான மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். மாணவ-மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம்

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, செலவுகளையும், அலைச்சலையும் தந்தாலும், ஓரளவுக்கு வெற்றி பெற்றுத் தருவதாகவும் அமையும்.

 

பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். வினைகள் யாவும் நீங்கும்.

 

மீனராசி: ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி )

5ம் இடம் – சுபபலன்

தன்னம்பிக்கை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 5-ல் அமர்வதால், புதிய பாதையில் பயணிப்பீர்கள். அடிப்படை வசதி- வாய்ப்புகள் உயரும். தடுமாற்றம் நீங்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும் கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல மணப்பெண் அமைவாள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வ நேர்த்திக்கடனை

நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை விலகும். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு  நல்ல பலன் உண்டு. வழக்கு சாதகமாகும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள். நட்பால் பலனடைவீர்கள். கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

குரு உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தந்தையாருடன் மனஸ்தாபம் நீங்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 11-வது வீட்டை குரு பார்ப்பதால், உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.

 

குரு பகவானின் சஞ்சாரம்…

13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் ராசி நாதனும் ஜீவனாதிபதியுமான குரு தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

29.6.14 முதல் 27.8.14 வரையிலும் உங்களின் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீடு, வாகன வசதி பெருகும். ஊர்ப் பொது நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி சொத்து சேரும். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 6-ல் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் செல்கிறார். புதிய முயற்சிகள் பலிதமாகும். அரசால் அனுகூலம் உண்டு.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்…

22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். மனைவி உங்களது ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இதமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் அல்லது புதுக் கிளைகள் தொடங்குவீர்கள்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புண்டு. இயக்கம், சங்கம் சார்பாக பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

 

கன்னிப்பெண்களுக்கு, உயர்கல்வியில் வெற்றி உண்டு. தடைப்பட்ட கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். நினைத்ததை சாதிப்பீர்கள். அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு, மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.

 

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நீங்கள் தொட்டதை எல்லாம் துலங்கவைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங் களையும் அள்ளித் தருவதாக அமையும்.

 

பரிகாரம்: பௌர்ணமி தினங்களில் ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.  நினைத்தது நிறைவேறும்.